சுட்டெரிக்கும் வெயிலால் நோய்கள் பரவும் அபாயம்

பருவ நிலை மாற்றம் காரணமாக 106 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் நோய்கள் பரவும் அபாயம்

பருவ நிலை மாற்றம் காரணமாக 106 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மஞ்சள் காமாலை, காய்ச்சல், அம்மை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயல்பான வெப்ப நிலையை விட கூடுதலான வெப்பம் இருப்பதால் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை கடுமையான வெயில் நிலவுகிறது.

இந்த மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோர், பல மணி நேரம் நாற்காலி, சோபாவில் அமர்ந்து பணி செய்வோருக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் இழக்கிறது.

இதனால் முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகளும் ஏற்படுகின்றன. இது தவிர மஞ்சள் காமாலை, காய்ச்சல், அம்மை நோய் வேகமாக பரவும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். நிகழாண்டு கோடையில் வெப்பம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தங்களது முகத்தை துணியால் மறைத்து செல்வதை காணமுடிகிறது. வெயிலின் உக்கிரத்தால் நா வறண்டு மயக்கம் ஏற்படுவதை போன்று உணர்வு ஏற்படுகிறது.

வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

இளநீர், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் இருக்கும் கரும்புச்சாறு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதானச் சாலையில் செல்லும்போது, வீசும் அனல் காற்றால் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

வெப்பத்தின் தாக்கத்தால் தங்களை பாதுகாத்து கொள்ள அதிகளவில் தண்ணீரை பருக வேண்டும். இளநீர், பழ வகைகள் அதிகமாக உண்ண வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com