சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது வேதனையளிக்கிறது: விஷால்

திரையங்குகளில் தொலைபேசி மூலம் திரைப்படங்களை பதிவு செய்பவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்
சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது வேதனையளிக்கிறது: விஷால்

சென்னை: திரையங்குகளில் தொலைபேசி மூலம் திரைப்படங்களை பதிவு செய்பவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் வாணி மகாலில் விளையாட்டு ஆரம்பம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 9 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்திற்காக தற்போது நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

மேலும் திரைப்படம் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்றும், இதை கருத்தில் கொண்டு பாகுபலி- 2 படத்தை கன்னடத்தில் வெளியிட வேண்டும் எனவும் விஷால் கேட்டுக்கொண்டார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதி நீர் பிரச்னையின்போது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்கள் திரையிடுவதை நிறுத்தச் சொல்லி அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் லரும் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

அப்படி பேசியபோது நான் கூறிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 ஆண்டுகளாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய் மொழி கன்னடம்.

கடந்த 9 ஆண்டுகளில் பாகுபலி 1 உட்பட நான் நடித்த சுமார் 30 படங்கள் கர்நாடக மாநிலத்தில் வெளியாகியுள்ளன. எந்தப் பிரச்னையும் எழவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை.

9 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அந்தக் கண்டனக் கூட்டத்தில் பேசிய விடியோ பதிவை யூடியூபில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்கள் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த வார்த்தைகளுக்காக 9 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னட மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழ் ஈழ உறவுகளும், தமிழக மக்களும், என் நலம் விரும்புபவர்களும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பாகுபலி என்ற பெரிய திரைப்படத்தில் நடித்த மிகச் சிறிய தொழிலாளி நான். என் ஒருவரின் பேச்சு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பு விரயமாவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது, கர்நாடகத்தில் பாகுபலி 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை என் நலம் விரும்பிகள் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.

என் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி 2 படத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்காக பொறுமை காத்து வந்த இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட படக் குழுவினருக்கு என் நன்றி.

இனிவரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை என தமிழக மக்களின் நியாயமான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

தமிழனாக இருப்பதே பெருமை: ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதைவிட, ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் பெருமை, மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார் சத்யராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com