நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்: தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு  

அரசின் புதிய பென்சன் கொள்கை அறிவிப்பை எதிர்த்து நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்: தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு  

சென்னை: அரசின் புதிய பென்சன் கொள்கை அறிவிப்பை எதிர்த்து நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் பொழுது சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் உண்டாகும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நாங்கள் அதற்கு அப்பொழுதே எதிர்ப்பு தெரிவித்தோம்.

மேலும் குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போகிறோம். இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடு பாதிக்கபப்டும். அத்துடன் கோடிக்கணக்கான அளவில் வருவாய் இழப்பும் உண்டாகும்.

இந்த போராட்டத்தை இனி வரும் காலங்களில் மாவட்ட அளவில் பல்வேறு வடிவங்களில் விரிவுபடுத்த உள்ளோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com