இளநிலை மருத்துவ மாணவி உமா ரவிசங்கருக்கு தங்கப் பதக்கம் வழங்குகிறார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, உடன் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி.
இளநிலை மருத்துவ மாணவி உமா ரவிசங்கருக்கு தங்கப் பதக்கம் வழங்குகிறார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, உடன் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி.

தமிழகத்துக்கு விரைவில் நிரந்தர ஆளுநர்: அமைச்சர் வெங்கய்ய நாயுடு

தமிழகத்துக்கு விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படுவார் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

தமிழகத்துக்கு விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படுவார் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி வெங்கய்ய நாயுடு பேசியது:
நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. திறமையுடன் மனிதாபிமானம், அர்ப்பணிப்பு உணர்வுள்ள மருத்துவர்களை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் 10.5 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் 6.5 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நீதி ஆயோக் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1985-ம் ஆண்டு வரை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவது கடினம் என்றார்.
இவ்விழாவில் இளநிலை மருத்துவ மாணவி உமா ரவிசங்கர் 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியது: யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும் போதே ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்கிறோம். ஹிந்தியை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com