பன்னீர் செல்வத்துக்கு நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார்: டி. ஜெயக்குமார்

கட்சி நலன் கருதி நிதியமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
பன்னீர் செல்வத்துக்கு நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார்: டி. ஜெயக்குமார்

கட்சி நலன் கருதி நிதியமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
சென்னை சேத்துப்பட்டு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பன்னீர்செல்வம் அணியினர் திங்கள்கிழமை (ஏப். 24) பேச்சுவார்த்தை நடத்தலாம். அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நிச்சயம் நடக்கும். எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகள் இருப்பது நியாயம்தான். திறந்த மனதுடன் அதைப் பேசுவதன் மூலம் சரி செய்ய முடியும். கட்சி, ஆட்சி நலனுக்காக, எனது நிதியமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளேன். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அம்மாவின் சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம்.
திமுக ஆட்சிக்கு வராது: 17 ஆண்டுகள் தி.மு.க, மத்தியில் கூட்டணி அரசில் இருந்தது. வளமிக்க இலாகாக்களை மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தி.மு.க. தமிழகத்துக்கு வளம் கொழிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்போது, எதுவுமே செய்யாமல், இப்போது அ.தி.மு.கவைக் குற்றம் சாட்டுவது சரியில்லை. அ.தி.மு.க ஆட்சி கவிழும் என்று தி.மு.க பகல் கனவு காண்கிறது. 6 மாதம் இல்லை 60 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com