விதிகளை மீறி செயல்படுகிறார் புதுவை முதல்வர்

தேசிய நெடுஞ்சாலைகளை மறுவகைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலம், பணி விதிகளை மீறி முதல்வர் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டினார்.
விதிகளை மீறி செயல்படுகிறார் புதுவை முதல்வர்

தேசிய நெடுஞ்சாலைகளை மறுவகைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலம், பணி விதிகளை மீறி முதல்வர் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 168 மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு ரூ.200 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என கலால் துறை தெரிவித்திருந்தது. தேசிய நெடுóஞ்சாலைகளில் மதுக் கடைகளை மூடியதால் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் நாராயணசாமி கடிதம்: புதுவையில் மொத்தம் 64.45 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன. அவற்றை மறுவகைப்படுத்தி மாவட்ட சாலைகளாக அறிவிக்குமாறு, மத்திய தரைவழிப் போக்குவத்து அமைச்சகத்துக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.
சுற்றுலா பயணிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும்போது, மதுக் கடைகள் இல்லாமல் திண்டாடுகின்றனர். அரசுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மறுவகைப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
ஆளுநர் கிரண் பேடி குற்றச்சாட்டு: தேசிய நெடுஞ்சாலைகளை மறுவகைப்படுத்துதல் தொடர்பான முக்கிய கொள்கை முடிவு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் போது, யூனியன் பிரதேச நிர்வாகியான தனக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், அதை மீறி முதல்வர் செயல்பட்டுள்ளார். துறைச் செயலர் இந்தக் கோப்பை ஆளுநர் பார்வைக்கு எனக் குறிப்பு எழுதியும் அதை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
முதல்வருக்கு இந்த பிரச்னையில் ஒரு நிலை இருக்குமானால், எனது நிலையையும் கேட்டு கோப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். பின்னர், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக விதிகளை மீறி இந்தத் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது என தொடர்புடைய அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும்.
மத்திய அரசுடன் முக்கிய கொள்கை: முடிவுகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம் நடைபெற்றால் துணை நிலை ஆளுநருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பது பணி விதியாகும்.
ஆனால், அதை மீறி முதல்வர் செயல்பட்டுள்ளார் என கிரண் பேடி குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com