சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் தமிழக வீரர்கள் 4 பேர் வீரமரணம்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நேற்று திங்கள்கிழமை ஒரே நேரத்தில் பெண்கள் உள்பட கருப்புச் சீருடையில் வந்த 300-க்கும் மேற்பட்ட
சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் தமிழக வீரர்கள் 4 பேர் வீரமரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நேற்று திங்கள்கிழமை ஒரே நேரத்தில் பெண்கள் உள்பட கருப்புச் சீருடையில் வந்த 300-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் சுற்றி வளைத்து அதிநவீன துப்பாக்கிகளால் நிகழ்த்திய தாக்குதலில் 4 தமிழக வீரர்கள் உட்பட 26 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

நக்ஸல்லைட்டுகள் நிகழ்த்திய வெறித்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களில் 4 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சிக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று நண்பகல் சுமார் 12.25 மணியளவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பெண்கள் உள்பட கருப்புச் சீருடையில் வந்த 300-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் சுற்றி வளைத்து அதிநவீன துப்பாக்கிகளால் நிகழ்த்திய தாக்குதலில் 4 தமிழக வீரர்கள் உட்பட 26 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நக்ஸல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 26 பேரின் அடையாளம் காணப்பட்டு தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    Drenching roots of the nation with their blood 26 heroes inspired by the motto of #NationFirst made supreme devotion to our motherland. pic.twitter.com/5To465Vdz4
    — CRPF (@crpfindia) April 24,    2017

வீரமரணம் அடைந்த அந்த வீரர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பத்மநாபன், அழகுபாண்டி, திருமுருகன், செந்தில்குமார் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி இதே போன்ற தாக்குதல் சுக்மா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில், 12 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீர மரணமடைந்த 4 தமிழக வீரர்களின் பெயர் பட்டியல்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன்
தஞ்சாவூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த பத்மநாபன்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார்
மதுரை மாவட்டம் பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com