போராட்டத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி

போராட்டத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி

முழு அடைப்புப் போராட்டத்தைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முழு அடைப்புப் போராட்டத்தைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், திரைப்படத் துறையினர், அரசுப் பணியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள் முடியாத நிலையில் உள்ளோம் என தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், முழு அடைப்புப் போராட்டத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது, அமைதியான முறையில் நடைபெற உள்ள போராட்டத்தைச் சீர்குலைக்கவும், கலகம் ஏற்படுத்தவும் பாஜக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. பாஜக மாநில தலைவரின் இந்த அறிவிப்பை கண்டிப்பதுடன், எத்தகைய வன்முறைகளுக்கும் இடமளிக்காது போராட்டத்தை முழு வெற்றியடைச் செய்வோம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com