தில்லியில் டிடிவி தினகரன் கைது: தலைவர்கள் அதிரடி கருத்துக்கள்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி
தில்லியில் டிடிவி தினகரன் கைது: தலைவர்கள் அதிரடி கருத்துக்கள்

சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (ஏப் 25) கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து 4-ஆவது நாளாக தில்லி காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு தினகரன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார். சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின்னர், தினகரன், மல்லிகார்ஜுன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தினகரன் முரண்பட்ட தகவல்கள் அளித்தார். பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தெரிவித்த தகவல்களும், காவல்துறைக்கு திருப்தியளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், தினகரனின் கைது குறித்து தலைவர்கள் தங்களின் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக): டிடிவி தினகரன் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கே அவமானம். மக்களுக்கே பணம் கொடுத்தவர். பணத்தால் எதையும் சாதிக்க அதிமுக முயல்கிறது. டிடிவி தினகரனுக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். தினகரன் கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதன் மூலம் பாஜகவால் தமிழகத்தில் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றார் தமிழிசை.

கோபண்ணா (காங்கிரஸ்): தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு தலைகுனிவு. அரசியலில் இருந்து அதிமுவை அப்புறப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

பொன்னையன் (பன்னீர்செல்வம் அணி): இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. நாடே காரி துப்பும் அளவுக்கு தினகரனின் செயல் உள்ளது.
ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளாக போயஸ்கார்டனில் இருந்து தினகரன் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார். அதன் பிறகு சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினார். ஜெயலலிதா மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்க நினைத்தவர்களுக்கு காலம் தக்க தண்டனையை வழங்கும் என்றார்.

நாஞ்சில் சம்பத் (அதிமுக அம்மா அணி பேச்சாளார்): தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் செயல். இதன் பின்னணியில் பாஜகவின் திட்டமிட்ட சதி உள்ளது. மோசமான முன்னுதாரணத்தை பாஜக மேற்கொண்டுள்ளது. தினகரனின் கைதால் அதிர்ச்சியடைவில்லை. இதனை சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக உள்ளோம். தினகரன் இப்போது தான் பலம் பெருகிறார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார் நாஞ்சில் சம்பத்..

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் கைது வைத்து பார்க்கும் சுகேஷ் சந்திரசேகரை வைத்து தினகரன் பாஜகவால் பழிவாங்கப்பட்டுவிட்டார். அதிமுகவின் அணிகள் இணைவது பாஜகவின் கையில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

எச்.ராஜா (பாஜக): இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முறையாக 37 மணி நேரம் விசாரணைக்கு பின்னரே தினகரன் கைது செய்யப்ப்டடுள்ளார். தினகரன் கைதுக்கு பாஜகவை காரணம் என கூறுவதை ஏற்க முடியாது என்று ராஜா தெரிவித்துள்ளார்.

புகழேந்தி (கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி): அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பார் தினகரன் என்றார் புகழேந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com