'நாடகக் கலையை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர் டி.கே. சண்முகம்'

நாடகக் கலையை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர் டி.கே.சண்முகம் என ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அவ்வை டி.கே.சண்முகத்தின் 105 -ஆவது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட 'மனைவி அமைவதெல்லாம்' நூலுடன் நூலாசிரியர் டி.கே.எஸ்.கலைவாணன்,
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அவ்வை டி.கே.சண்முகத்தின் 105 -ஆவது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட 'மனைவி அமைவதெல்லாம்' நூலுடன் நூலாசிரியர் டி.கே.எஸ்.கலைவாணன்,

நாடகக் கலையை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர் டி.கே.சண்முகம் என ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் 50 -ஆவது ஆண்டு விழா, அவ்வை டி.கே.சண்முகத்தின் 105 -ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்து விருதுகளை வழங்கி பேசியதாவது:
டி.கே.சண்முகம் நாடகக் கலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். அதேபோல் மேடை நாடகத்தில் சாதனைகளையும் செய்தவர். டி.கே.எஸ்.கலைவாணன், தந்தையின் வழியில் வாழ்ந்து கலைச் சேவை செய்து வருகிறார். அவர் மென்மேலும் கலைச்சேவை செய்து நாட்டிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
இந்த விழாவில், பூவிலங்கு மோகன், நடிகை பி.எஸ்.சரோஜா, மரபிசைக் கலைஞர் மகதி, தொழிலதிபர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆகியோருக்கு கலைமேதைகள் விருது வழங்கப்பட்டது.
மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் வ.வேம்பையன், ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றத்தின் செயலாளர் கெ.பக்தவத்சலம், கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோருக்கு தமிழ்ச்சான்றோர் விருதும், 'அபூர்வராகம்' ஆசிரியர் வழுவூர் ரவி, சமூகப் பணியாளர் மெ.ரூஸ்வெல்ட், சொற்பொழிவாளர் இறைமறைதாசன், வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோருக்கு சுவாமிகள் நினைவு சிறப்பு விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு நூற்றாண்டு நினைவு விருதையையும், வேம்பத்தூர் கிருஷ்ணனுக்கு பொற்கிழியையும் அவர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய 'மனைவி அமைவதெல்லாம்' என்ற நூலை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் வெளியிட, தொழிலதிபர் வி.மணிலால் பெற்றுக் கொண்டார். விழாவில் டி.கே.எஸ்.கலைவாணன் வரவேற்புரை வழங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள் மன்றத்தின் துணைச் செயலாளர் டி.கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com