வறட்சியால் விவசாயிகள் சாகவில்லை என்றால் வறட்சி நிதி கேட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு, விவசாயிகளுக்கு இதுவரை செய்த கொடுமையை விட இது மிகப்பெரிய கொடுமை என்று தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வறட்சியால் விவசாயிகள் சாகவில்லை என்றால் வறட்சி நிதி கேட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக அரசு, விவசாயிகளுக்கு இதுவரை செய்த கொடுமையை விட இது மிகப்பெரிய கொடுமை என்று தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஸ்டாலின்.

அப்போது, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக அரசு, விவசாயிகளுக்கு செய்யும் கொடுமையை விட இது மிகப்பெரிய கொடுமை என்று கூறினார்.

மேலும், வறட்சி நிவாரணம் கேட்டது பொய்யா அல்லது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது பொய்யா? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, வறட்சி நிவாரணம் கேட்டது ஏன்? என்று கேள்விகளை எழுப்பினார்.

அதோடு, மின்வெட்டு பிரச்னையை பற்றி சிந்திக்க, தீர்க்க தமிழக அரசுக்கு நேரம் இல்லை. அது பற்றி கவலைப்படவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com