அரசியல் ஆதாயத்துக்காக திமுக மீது குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக திமுக மீது சில கட்சிகள் குற்றம்சாட்டி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசியல் ஆதாயத்துக்காக திமுக மீது குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக திமுக மீது சில கட்சிகள் குற்றம்சாட்டி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் நலன் மற்றும் தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகள் தீர்க்க வலியுறுத்தி திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் காரணங்களுக்காக போராட்டத்தில் பங்கேற்காத சில கட்சிகளின் தலைவர்களும் திமுக மீது வசைமாரி பொழிகின்றனர். விவசாயிகளின் நலனுக்காகப் போராட திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேட்கின்றனர்.
காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், மீத்தேன் ஆய்வுக்கு மட்டுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருந்தாலும் அதுகுறித்து திமுக மீது குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது.
எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் மீண்டும் அவதூறு சுமத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சியைப் பற்றி திமுகவினர் கவலைப்பட வேண்டாம்.
விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, உழவர் சந்தை, ஆறுகளைத் தூர்வாருதல், தமிழக நதிநீர் இணைப்பு, நெல் கரும்பு உள்ளிட்டவற்றுக்கான நியாயமான ஆதார விலை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியதும், முன்னெடுத்ததும் திமுக அரசுதான் என்பதை விவசாயிகள் அறிவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com