சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு, 2016 -ஆம் ஆண்டில் (01.01.2016 முதல் 31.12.2016 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000, அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000 என ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இந்தப் போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ பெறலாம். துறையின் வலைதளத்திலிருந்தும் (www.tamilvalarchithurai.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அலுவலக முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம்,தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600008. தொலைபேசி எண்கள்: 044- 28190412, 28190413.
விண்ணப்பத்தை அஞ்சல் வாயிலாகப் பெற 23 -க்கு 10 செ.மீ., அளவிலான சுய முகவரியிட்ட உறையில் ரூ.10 அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன்...: போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும், போட்டிக் கட்டணம் ரூ.100-க்கான வங்கி கேட்புக் காசோலையை ''தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை'' என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டுடன் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வரும் ஜூலை 31 -ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com