தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகமெங்கும் பரவலாக காணப்படும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடிநீர் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், மாநிலம் முழுதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.   

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை  ஈடுபட்டு அதுதொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் மாநிலம் முழுதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதன் காரணமாக ஏற்படும் சுற்றுச் சூழல் மற்றும் இதர பாதிப்புகள் குறித்து எந்த விதமான ஆய்வுகளும் செய்யபடவில்லை. அதே நேரத்தில் அகற்றப்படும் மரங்களுக்கு ஈடாக பசுமை வளம் காக்க மரங்களும் நடப்படுவதில்லை. எனவே இது தொடர்பாக சென்னை ஐ.ஜ.டி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவினை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற  தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை ஐஐடி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்ட நீதிமன்றம், வழக்கினை மே மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்த வைத்து உத்தரவிட்டது. அதனுடன் இந்தவழக்கினை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com