தேடப்படும் முஸ்டாக் அகமது பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்டாக் அகமது (56) பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்
தேடப்படும் முஸ்டாக் அகமது பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்டாக் அகமது (56) பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 1993, ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்பட18 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது.
அபு பக்கர் சித்திக், ஐதர் அலி, காஜா நிஜாமுதின் ஆகிய 3 பேர் இந்தக் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற எட்டு பேரில் ஏழு பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ். ஏ. பாட்ஷா உட்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை அமைப்பான சிபிஐ நிரூபிக்கத் தவறியதால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தடா நீதிமன்றம் கூறியது.
இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் இமாம் அலி, பழனி பாபா ஆகிய இருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டனர். முஸ்டாக் அகமது என்பவர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், முஸ்டாக் அகமது விவகாரம் தொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, முஸ்டாக் அகமது பற்றி பொதுமக்கள் துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிபிஐ தலைமையகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com