நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்

நடிகர் வினு சக்கரவர்த்தி (72) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.27) காலமானார்.
நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்

1,000 படங்களில் நடித்தவர்
நடிகர் வினு சக்கரவர்த்தி (72) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.27) காலமானார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்து, தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார் வினு சக்கரவர்த்தி. இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை காலமானார்.
1,000 படங்களில் நடித்தவர்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் 1945-இல் பிறந்த வினு சக்கரவர்த்தி, 1977-இல் திரையுலகில் நடிகராக நுழைந்தார். வண்டிச்சோலை சின்ராசு, கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாதி ராஜா, அண்ணாமலை, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படஙகளில் நடித்து பிரபலமானார். பல திரைப்படங்களை இயக்கியுள்ள வினு சக்கரவர்த்தி, வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். குணசித்திரம், நகைச்சுவை, வில்லன் என பல பாத்திரங்களில் நடிப்பை வெளிப்படுத்திய வினு சக்கரவர்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1002 படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளிவந்த வாயை மூடி பேசவும் அவர் நடித்த கடைசி படமாகும்.
முன்னணி நடிகர்களுடன்..:நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர் வினு சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினிகாந்துடன் 12 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர்: மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார் வினு சக்கரவர்த்தி. சாதாரண பெண்ணாக இருந்த சில்க் ஸ்மிதாவை வண்டிச் சக்கரம் படத்தில் அறிமுகம் செய்து வைத்தவர் இவரே.
இன்று இறுதிச் சடங்கு: வினு சக்கரவர்த்திக்கு மனைவி கர்ணாப்பூ, மகன் சரவணன், மகள் சண்முகப்பிரியா ஆகியோர் உள்ளனர். சென்னை சாலிகிராமம், அபுசாலி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com