மே 1-ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை: புதுவையில் அறிமுகம்

புதுச்சேரி மாவட்டத்தில் வரும் மே 1-ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது
மே 1-ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை: புதுவையில் அறிமுகம்

புதுச்சேரி மாவட்டத்தில் வரும் மே 1-ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது என ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன திருச்சி பிராந்திய முதன்மை மேலாளர் பிபாஷ்தா சாரங்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமுல்படுத்தப்படுகிறது. மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவறறின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இவை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக புதுச்சேரி, விசாகப்பட்டினம்,உதயப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் மே மாதம் 1-ஆம் தேதி முதல், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல்படுத்தவுள்ளன. இதையடுத்து, நாடு முழுமைக்கும் படிப்படியாக இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.

பரிசோதனை முறையில், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.பிறகு, இந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவுபடுத்தும்.

இதுகுறித்து முதன்மை மேலாளர் சாரங்கி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. நாள்தோறும் இரவு 12 மணிக்கு சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும். 2 பைசா முதல் 10 பைசா வரை நாள்தோறும் விலை மாறும்.

இதனால் நுகர்வோர், பெட்ரோல் விற்பனை முகவர்கள் சுமை குறையும். புதுச்சேரி மாவட்டத்தில் எச்பிசிஎல் 24, ஐஓசி 49, பிபிசிஎல் 27 பெட்ரோல் பங்குகள் உள்ளன. சில பங்குகளில் மட்டுமே தானியங்கி விலை சீரமைப்பு வசதி உள்ளது.

2 அல்லது 3 மாதங்களில் அனைத்திலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். இச்சோதனை முறை தொடர்பாக நுகர்வோர், விற்பனையாளர்கள் கருத்துக்கள் பெறப்பட்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்றார். விற்பனை மேலாளர் பாலமுருகன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com