'விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை'

விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
'விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை'

விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தேச துரோக வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமையுடன் (ஏப்.27) முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வைகோவின் காவலை ஜூன் 2 -ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுகவுக்கு தகுதி இல்லை: அதனைத் தொடர்ந்து போலீஸார் மீண்டும் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் புறப்படும்போது வைகோ அளித்த பேட்டி:
தில்லியில் 40 நாள்களுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுத்தது கண்டனத்துக்குரியது.
இன்றைக்கு விவசாயிகளின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்கிறது திமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என 2007 -இல் தீர்ப்பு வந்தபோது, அதை வெளியிடவோ அல்லது மேலாண்மை வாரியம் அமைக்கவோ திமுக முயற்சிக்கவில்லை.
அதேபோல், நதிநீர் இணைப்புக்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்தபோது, இந்திய அளவில் அதை எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டுமே.
எனவே விவசாயிகளைப் பற்றியோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தோ, நதிநீர் இணைப்பு குறித்தோ பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com