சுந்தர் பிச்சையின் 2016-ம் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?

கூகுள்  நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர்
சுந்தர் பிச்சையின் 2016-ம் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?

கூகுள்  நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டின் பங்குத் தொகையாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளது கூகுள் நிறுவனம். இந்தத் தொகை அவர் 2015-ம் ஆண்டு பெற்ற தொகையைவிட இரு மடங்கு அதிகமாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை(44) 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். 2016-ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 6,50,000 அமெரிக்க டாலர் அவர் பெற்றுள்ளார்.

சுந்தர் பிச்சை சிஇஓவாக பதவியேற்ற பிறகு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய அறிமுகங்களைப் புகுத்தினார். யூடியூப்பில் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை அதிகப்படுத்தியிருந்தார்.

மேலும் 2016-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் போன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி ஹைட்போன், ரவுட்டர், குரல்களைக் கட்டுப்படுத்தும் ஒலிபெருக்கி போன்றவற்றை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இத்தகைய அறிமுகங்கள் கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தின.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஹார்டுவேர் உள்ளிட்ட சேவைகளில் மூலம் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த வருமானம் கூகுளின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகமாம்.

இத்தகைய காரணங்களால் 2016-ஆம் ஆண்டின் பங்குத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

2015-ஆம் ஆண்டில் அவர் பங்குத் தொகையாக 99 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியது. அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இரு மடங்கு அதிகமாக பெற்றுள்ளார்.

சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் வழங்கிய  2016-ஆம் ஆண்டுக்கான பங்குத் தொகையின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.1,265 கோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com