இரு அணிகளிலும் விடாப்பிடி: அதிமுக இணைப்பில் தொடரும் இழுபறி

இரு அணிகளிலும் விடாப்பிடியாக தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருவதால் அதிமுக இணைப்பில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இரு அணிகளிலும் விடாப்பிடியாக தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருவதால் அதிமுக இணைப்பில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விலக்கி வைப்பதாக அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுக அம்மா அணி, ஓ.பி.எஸ்., அணி ஆகியன விரைவில் இணைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இரு அணிகளிலும் கோரிக்கை: பேச்சுவார்த்தைக்கு முன்பு எந்தவிதமான கோரிக்கைகளையும் ஏற்க இயலாது என அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை ஓ.பி.எஸ். அணியினர் முன்வைத்து வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏற்க இயலாது என்று அதிமுக அம்மா அணி தெரிவித்து வருகிறது.
விடாப்பிடியால் இழுபறி: இரு அணியினரும் தங்களது கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருப்பதால் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடக்காததால், இரு அணிகளின் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com