மதுக்கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மதுக் கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை
மதுக்கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மதுக் கடைகளை மூட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஜனநாயக கட்டமைப்பில் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்றாக கிராம சபை திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாள், குடியரசு நாள், மகாத்மா காந்தி பிறந்த நாள் என மொத்தம் 4 முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவது கட்டாயமாகும்.

அந்த வகையில், 12,500-க்கும்  மேற்பட்ட கிராங்களில் மே 1 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்கள் மிகவும் அரிய வாய்ப்பாகும்.

தமிழகத்தின் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தான். இப்போது மதுக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இத்தகைய சூழலில் மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது. ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும் எனக் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com