இரட்டை இலை சின்னத்தை மீட்பது உறுதி: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணி மீட்பது உறுதி என அம்மா அதிமுக பொருளாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல்

மதுரை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணி மீட்பது உறுதி என அம்மா அதிமுக பொருளாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

மதுரையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அதிமுக அணிகளுக்கு இடையேயான இணைப்பு சுமூகமாக நடைபெறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஓபிஎஸ்.அணியின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் தரப்பில் 50 மாவட்டச் செயலர்கள், 124 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 25 மக்களவை உறுப்பினர்கள், 95 சதவிகித கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை மீட்பது உறுதி என்று கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ்யாதவுக்கு கட்சி சின்னம் அளிக்கப்பட்ட முறையை தமிழகத்தில் அதிமுகவுக்கும் தேர்தல் ஆணையம் பின்பற்றியிருக்கவேண்டும்.

அதிமுக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர நினைப்பது பகல் கனவாகவே இருக்கும். அதிமுக கட்சியினரின் முடியைக் கூட திமுக அபகரிக்கமுடியாது.

தமிழக சட்டப்பேரவை கூடும் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களை விட கூடுதலாக பத்து அல்லது பனிரெண்டு உறுப்பினர்கள் ஆதரவளிப்பர் என்றவர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை திமுக தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அனுமானத்தின் அடிப்படையில் தவறான கருத்துக்களை கூறியுள்ளார் என்று திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com