சாலையில் தவறவிட்ட 60 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமிக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகிறார் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ்.
சாலையில் தவறவிட்ட 60 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமிக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகிறார் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ்.

சாலையில் தவறவிட்ட 60 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தனியார் நிறுவன மேலாளர் தவறவிட்ட 60 பவுன் நகையை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தனியார் நிறுவன மேலாளர் தவறவிட்ட 60 பவுன் நகையை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கோவை தெலுங்குபாளையத்தை அடுத்த பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.முனியப்பன் (45). இவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், முனியப்பன் ஆட்டோ நிறுத்தத்தில் திங்கள்கிழமை இருந்தபோது, சாலையில் மஞ்சள் நிறத்திலான பை கிடந்துள்ளது. அந்தப் பையை முனியப்பன் எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள், நகைகள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சக ஓட்டுநர்களுடன் சென்று ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அந்தப் பையை அவர் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நகை கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்குச் சொந்தமானது தெரியவந்தது. சுவாமிநாதன் தனது நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய பழனிசாமியிடம் 60 பவுன் நகைகளைக் கொடுத்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்துப் பணம் வாங்கி வரும்படி தெரிவித்துள்ளார். அந்த நகைகளை பழனிசாமி தனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் வைத்துச் சென்றபோது அது தவறி சாலையில் விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநரையும், நகை உரிமையாளரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸார் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தலா 1 பவுன் கொண்ட 20 தங்க நாணயங்கள், 40 பவுன் நகை என மொத்தம் 60 பவுனுக்கான முழு விவரங்களையும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதையடுத்து, நகைகளை சுவாமிநாதனிடம் போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனைப் பாராட்டி காவல் ஆணையர் அ.அமல்ராஜ் அவருக்கு ரூ. 1,000-மும், நகை உரிமையாளர் சுவாமிநாதன் ரூ. 10 ஆயிரமும் அன்பளிப்பாக வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com