சிறுதொழில்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில்களைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுதொழில்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில்களைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நேர்மையாகத் தொழில் புரிபவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் கூறியுள்ளார் .
ஜி.எஸ்.டி. வரியால் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடிக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு 5 சதவீத வரியும் ரூ.1 லட்சம் வியாபாரம் செய்பவர்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, ஜவுளித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர் எல்லாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய நிதியமைச்சரே தமிழகத்துக்கு வந்திருந்தும் சிறு, குறு தொழில் பாதிப்பு பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
எனவே, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி, கைத்தறி, ஜவுளித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் உடனடியாக ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கூட்டி வரியைக் குறைத்து, சிறு மற்றும் குறு தொழில்களை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காப்பாற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com