சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு மீது நாளை விசாரணை; எப்படி நடக்கும் தெரியுமா?

சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு மீது நாளை விசாரணை; எப்படி நடக்கும் தெரியுமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

புதுதில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்  சாட்டப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, அவரது அண்ணி இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகிய இருவரும் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தற்பொழுது பினாகி சந்திர கோஷ் ஓய்வு பெற்று விட்டதால் கற்பொழுது நீதிபதிகள் பாலி ரோஹிங்க்டன் நாரிமன் மற்றும் அமித்தவா ராய் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடக்க உள்ளது.

நாளை மதியம் சரியாக 01.35 மணிக்கு நடைபெற உள்ள இந்த விசாரணையானது சாதாரண வழக்குகளைப் போல அல்லாது, நீதிபதிகளின் சேம்பரில் நடைபெற உள்ளது.அது போலவே எழுத்துபூர்வமான வாதங்கள் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.வாதங்கள் எதுவும் கிடையாது.முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சங்கள் மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com