நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்


சென்னை: நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பிபிஎஸ் மாணவ சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்.

அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நேற்று மத்திய அமைச்சர் நட்டாவை புது தில்லியில் மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளோம் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com