இசைவாணிக்கு மீண்டும் கிடைத்த இனிய முகம்!

இசைவாணிக்கு மீண்டும் கிடைத்த இனிய முகம்!

வெறிநாய் கடித்ததில் சேதமடைந்த மூன்றரை வயதுப் பெண் குழந்தையின் முகம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் அரசு மருத்துவர்களால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

வெறிநாய் கடித்ததில் சேதமடைந்த மூன்றரை வயதுப் பெண் குழந்தையின் முகம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் அரசு மருத்துவர்களால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட அம்பலவாணபுரத்தைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். தச்சு கூலித் தொழிலாளி. இவரது 2ஆவது மகள் இசைவாணி.

மூன்றரை வயதான இந்தக் குழந்தை கடந்த ஜூலை 3ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் விளையாடிய போது, வெறிபிடித்த நாய் ஒன்று, கன்னத்தில் கவ்வி இழுத்துச் சென்றது.

குழந்தையில் அலறல் சப்தம் கேட்டு வீட்டில் இருந்து தாய் உமா மற்றும் பொதுமக்கள் ஓடிச் சென்று, நாயை விரட்டிவிட்டு குழந்தையை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கன்னத்தில் நாய் கடித்ததில் விழுந்துள்ள குழிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நிவர்த்தி செய்ய முடிவு செய்தனர்.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நடவடிக்கைகளுக்காக குழந்தையின் சிகிச்சை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலைமை குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆட்சியர் உடனடியாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சித்தி அத்திய முனவராவை தொடர்புகொண்டு, குழந்தை இசைவாணிக்கு எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக மேல்சிகிச்சை தொடர உத்தரவிட்டார்.

இதையடுத்து, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.

முதல்கட்டமாக ஹீலிங் தெரபி சிகிச்சை மூலம் தோலை இணைக்கச் செய்து ஒட்டும்படி செய்தனர்.

தொடர் கண்காணிப்புக்கு பிறகு கடந்த 22ஆம் தேதிக்கு நல்ல நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குழந்தை.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இசைவாணி, தனது தந்தை மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினருடன் ஆட்சியரை சந்தித்து பூங்கொத்து அளித்து நன்றி தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com