அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்

அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்

அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் புதன்கிழமை அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியது:
அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகளையும் ஒன்றிணைக்க 60 நாள்கள் வாய்ப்பு அளித்திருந்தேன். அது நிறைவேறாததால், இரு அணிகளையும் ஒன்றிணைத்து கட்சியைப் பலப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபடுவேன். பிரிந்துள்ள இரு அணிகளை ஒன்றிணைப்பதுதான் எனது தலையாயப் பணியாக இருக்கும்.
சென்னையில் உள்ள தலைமைக் கழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்வேன். அதுகுறித்து முன்கூட்டியே ஊடகங்களிடம் தெரிவிப்பேன். அமைச்சர் ஜெயகுமார் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்து சலிப்பு ஏற்பட்டுவிட்டது. கட்சி அலுவலகத்திற்கு நான் செல்லக் கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.
கட்சியில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் வாய்க்கு வந்தபடி பேச மாட்டார்கள். எனக்கு கட்சியின் 122 எம்.எல். ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இரு அணிகளும் இணைந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தெரிவிப்பேன்.
கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, மாவட்டத்திற்கு ஒரு பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறேன். அந்த கூட்டங்களில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பேன்.
சசிகலாவைச் சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். சிறையில் மற்ற கைதிகளைப் போலவே சசிகலாவும் உள்ளார். சசிகலா மீது அவதூறு கூறிய பெங்களூரு மத்திய சிறைத் துறை முன்னாள் டிஐஜி டி.ரூபாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.
கமல் அரசியலுக்கு வருவது அவரது சொந்த உரிமை. அரசியலுக்கு வருமாறு கமலுக்கு அழுத்தம் கொடுப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com