புதுச்சேரியில் தொடங்கும் விமான சேவை எக்காரணத்துக்காகவும் தடைபடாது: ஆளுநர் கிரண்பேடி

வரும் 16ஆம் தேதி துவக்கப்படும் விமான சேவை எக்காரணத்திற்காவும் நிறுத்தப்படாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடங்கும் விமான சேவை எக்காரணத்துக்காகவும் தடைபடாது: ஆளுநர் கிரண்பேடி

வரும் 16ஆம் தேதி துவக்கப்படும் விமான சேவை எக்காரணத்திற்காவும் நிறுத்தப்படாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். குளங்கள் நீராதாரங்கள்
தூர்வாருதல், தூய்மை இந்தியா போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

வரும் 16 -ஆம் தேதி புதுச்சேரி-ஐதராபாத் இடையேயான விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. அதனையொட்டி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் என்சிசி மாணவர்களுடன் சேர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மேலும்  மாணவர்கள் வாரம் தோறும் மரக்கன்றுகளை கண்காணிக்கவேண்டும். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்
என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 16 ம் தேதி தொடங்கவுள்ள விமான சேவையில் பயணிகள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களுக்கு நிழல் தரும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுளளது.

மத்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி உதான் திட்டத்தில் தொடங்கப்படும் விமான சேவை எக்காரணம் கொண்டு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து
நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் கிரண்பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com