வெளிநாடு தப்பிக்காமல் இருக்கவே கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் 

கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை.
வெளிநாடு தப்பிக்காமல் இருக்கவே கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் 

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத் தந்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

மேலும், அந்நிய செலவாணி மோசடி வழக்குகளில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தேடப்படும் நபராக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது.

அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், கார்த்தி சிதம்பரம் குறித்து 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், இவ்வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ந் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com