சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்பு!

சென்னை:   சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் ஆகஸ்ட் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் பொறுப்பேற்பு!

சென்னை:   சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் ஆகஸ்ட் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக  ராபர்ட் பர்ஜெஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், தலைநகர் வாஷிங்டனில் இயங்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவு சார்ந்த பிராந்திய பிரச்சினைகளைக் கையாளும் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு, தாஜிகிஸ்தானிலுள்ள துஷான்பே அமெரிக்கத் தூதரகத்தில், துணைத் தலைமைத் தூதராகப் பணியாற்றியிருக்கிறார். பிஷ்கெக் (கிர்கிஸ்தான்), பாகு (அஜர்பெய்ஜான்), லிலோங்வே (மால்வி), கராச்சி (பாகிஸ்தான்) ஆகிய இடங்களிலும் அமெரிக்க வெளியுறவு அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார். வெளியுறவுப் பணிக்கு வரும்முன், வழக்கறிஞராகப் பணிபுரிந்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள இலியனோஸ் மாகாணத்தின் வாக்கேகன் நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் பர்ஜெஸ். கொலராடோ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றவர். கலிஃபோர்னியா மாகாணத்தின் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்டினிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில், தொழில் மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். 2012-ல் அமெரிக்கத் தேசியப் போர் கல்லூரியிலிருந்து தேசியப் பாதுகாப்பு உத்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்

பதவியேற்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' அமெரிக்க-இந்திய உறவின் முக்கியமான இக் காலகட்டத்தில், தென்னிந்தியாவில் அமெரிக்க அரசின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் பற்றி அறிந்துகொள்ளவும் இருதரப்பு நல்லுறவை முன்னெடுத்துச் செல்லவும் ஆர்வமாக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com