ஜி.எஸ்.டி. இல்லாத பொருள்களுக்கு கூடுதல் விலை நிர்ணயித்தால் நடவடிக்கை: அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. இல்லாத பொருள்களுக்கு கூடுதல் விலை நிர்ணயித்து நுகர்வோரிடம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதித் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். ஜிஎஸ்டியில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வரியைத் தான் வணிகர்கள் பொதுமக்களிடம் வசூலிக்கவேண்டும். ஜிஎஸ்டி இல்லாத பொருள்களுக்கும், விலையைக் கூட்டி நுகர்வோரிடம் வசூலிக்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் குறித்த விவகாரம் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்டச் சூழலில், புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது.
ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சிகளை யார் செய்தாலும் அவர்களை மறைந்த தலைவர் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. அப்படிப்பட்டவர்களை மக்களும் மன்னிக்கமாட்டார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com