நெடுவாசலில் இலையில் மண்ணை கொட்டி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதியினர் இலையில் மண்ணை கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசலில் இலையில் மண்ணை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டோர்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 118-வது நாளாக திங்கள்கிழமை திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, திட்டத்தை ரத்து செய்யவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, நெடுவாசலில் திட்டத்தை செயல்படுத்தி அப்பகுதி மக்களின் உணவில் மண்ணை போட்டுவிடவேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக, போராட்டக்களத்தில் இலை போட்டு, அதில் மண்ணை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com