ரத்தினகிரி அருகே அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து: 6 பேர் சாவு

வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி நொறுங்கி கிடக்கும் கார்கள்.
அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி நொறுங்கி கிடக்கும் கார்கள்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்மின்னல் கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் அப் பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துள்ளார்.
அப்போது வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி வந்த காரின் ஓட்டுநர், அவர் மீது மோதாமலிருக்க காரை எதிர்திசையில் திருப்பியுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார், எதிரே வந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதின.
இதையடுத்து அதன் பின்னால் வந்த மற்றொரு காரும், லாரியும் அந்தக் காரின் மீது மோதி நின்றன. இதில் கார்கள் நொறுங்கின.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில், மூன்று கார்களில் பயணம் செய்த பெங்களூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், லட்சுமிபிரபா, பாக்யலட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஞானராஜ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், ரவிசந்திரன் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் இறந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பெங்களூரைச் சேர்ந்த சரண்குமார்(10), ரூபேஸ்வரி(19), காயத்ரி (17) , கீர்த்தனா (24), நிஷாந்த் (25), மோகன் (43), கஸ்தூரி குமரேஷ் (39), பிரனிக் (14) ஆகிய 8 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பார்த்தார்... விபத்து நடந்த இடத்தை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், எம்எல்ஏக்கள் ராணிப்பேட்டை ஆர். காந்தி, வேலூர் ப.கார்த்திகேயன், ஆற்காடு ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
விபத்து குறித்து ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com