+1 பொதுத்தேர்வு அரசாணை ரத்து கோரி வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்!

+1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
+1 பொதுத்தேர்வு அரசாணை ரத்து கோரி வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்!

மதுரை: +1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு மற்றும்  12-ஆம் வகுப்புகளைப் போல, +1 வகுப்புகளுக்கும் பொதுத்தேவு நடைபெறும் என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' தேர்வில் +1 பாடத்திட்டத்திலிருந்து 40% கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. 

எனவே அதற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு, அவர்களது கல்வித் தரத்தினை உயர்த்தும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆலோசனையின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த பதில் மனுல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவு பெற்றதனைத்  தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தற்பொழுது  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com