வங்கி ஊழியர்கள் 22-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் 22-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கிய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதால் பண பரிவா்த்தனைகளில் பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் துறை வங்கிகளை ஒன்றொடொன்று இணைக்கக் கூடாது, பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், வசதி இருந்தும் திருப்பிக் கட்டாத கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடக் கூடாது, வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் சேவைக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்களின் 9 சங்கங்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்த மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம், விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட விழாக்களின் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால் வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com