கொடைக்கானலில் இரோம் சர்மிளா திருமணத்துக்கு ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு

கொடைக்கானலில் மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகள் மற்றும் அடுக்கம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சார்-பதிவாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கொடைக்கானலில் மணிப்பூர் மாநில பெண் போராளி இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகள் மற்றும் அடுக்கம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சார்-பதிவாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

இரோம் சர்மிளா, கடந்த 3 மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். மேலும் தனது காதலரான லண்டனைச் சேர்ந்த தேம்ஸ்வந் கொட்டினக்கோவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, கடந்த ஜூலை 12-ஆம் தேதி கொடைக்கானல் சார்-பதிவாளரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த திருமணத்துக்கு, பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன், இந்து மக்கள் கட்சியினர் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அடுக்கம் பகுதி ஆதிவாசிகள், பாலமலை, பாரதி, அண்ணாநகர், சாமக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கொடைக்கானல் சார்-பதிவாளர் ராதாகிருஷ்ணனிடம், இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இரோம் சர்மிளா, திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கி மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்குப் போராடப் போவதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து அதிரடிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இரோம் சர்மிளாவின் இந்த கருத்து எங்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனவே இவர்களது திருமணம் கொடைக்கானலில் நடைபெறக் கூடாது. அவர்கள் இங்கு தங்கவும் கூடாது. மீறினால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com