திருவண்ணாமலை கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பக்த மார்கண்டேயர் கோயில் சிலை

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காமாட்சியம்மன் கற்சிலை, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பக்த மார்கண்டேயர்

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காமாட்சியம்மன் கற்சிலை, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பக்த மார்கண்டேயர் கோயில் மூலவர் சிலை என்று தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை, சுண்ணாம்புக்காரத் தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழைமையான கிணற்றைத் தூர்வாரிய போது, கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிலை காமாட்சியம்மன் சிலை என்று கூறப்பட்டது.
அந்தச் சிலையை வட்டாட்சியர் ரவி தலைமையிலான வருவாய் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
மார்கண்டேயன் கோயில் சிலை: இதற்கிடையே, கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது காமாட்சியம்மன் சிலை அல்ல என்றும், அது 2014}ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பக்த மார்கண்டேயர் கோயில் சிலை என்பதும் தெரிய வந்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான கோயில்கள், குளங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை ஒவ்வொன்றாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி காணாமல் போகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை } செங்கம் சாலை, ரமணாஸ்ரமம் எதிரே கிரிவலப் பாதையையொட்டி இருந்தது பக்த மார்கண்டேயர் கோயில். அருணாசலேஸ்வரர் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலை 2014}ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்கள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கோயிலில் இருந்த மூலவர் சிலை இரவோடு இரவாக கடத்தப்பட்டுள்ளது. கோயில் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு அந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் இருந்த மூலவர் மார்கண்டேயர் சிலைதான் தற்போது கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும்...: கிணற்றில் கிடைத்த சிலை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மார்கண்டேயர் கோயில் மூலவர் சிலை என்பது தெரிய வந்ததும் பக்தர்கள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
பழைமையான கோயிலை இடித்து அதில் இருந்த சிலையைக் கிணற்றில் போட்டுள்ளார்களே என்று பக்தர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், கடத்தப்பட்ட சிலை மீண்டும் கிடைத்துள்ளதால் பலர் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

1.இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பக்த மார்கண்டேயர் கோயில் (கோப்புப் படம்).
2. கோயில் இடிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட மூலவர் சிலையின் புகைப்படம் (கோப்புப் படம்).
3. கிணற்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட கற்சிலை (தற்போதைய படம்).


மீண்டும் கோயில் கட்ட வேண்டும்: இதுகுறித்து தமிழ்ú தசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சி.மு.சிவபாபு கூறியதாவது:
பழைமையான பக்த மார்கண்டேயர் கோயில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது. இந்தக் கோயிலை 2014}இல் சிலர் இடித்து அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் அப்போதைய அறநிலையத் துறை ஆய்வாளர் நரசிம்மன் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர். பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.
தற்போது கிடைத்துள்ள சிலை மார்கண்டேயர் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயிலை இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமும், தற்போது கிடைத்துள்ள சிலையின் புகைப்படமும் ஒரே மாதிரி உள்ளன. வருவாய்த் துறையினரும், தொல்லியல் துறையினரும் இந்தச் சிலை மார்கண்டேயர் சிலைதான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
எனவே, இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்டி, ஆகம விதிகளின்படி சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றார். இதுகுறித்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிவனடியார்கள் கூறியதாவது:
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்ட வேண்டும். அந்தக் கோயிலில் மார்கண்டேயர் சிலையை வைத்து மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com