பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) தொடங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி.

பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) தொடங்கியது.

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரப்பி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் பட்டப்படி) ஆகிய 9 படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லுôரிகளில் 538 இடங்களும், தனியார் கல்லுôரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7,458 இடங்களும் உள்ளன. மேலும் தனியார் கல்லுôரிகளில் 4,242 நிர்வாக என மொத்தம் 12,238 இடங்கள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.400 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்.ர்ழ்ஞ் ஆகிய இணையதங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் படிப்புகளுக்காக 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை நேரடியாகப் பெறுவதற்கு, இணையதளத்தில் பதவிறக்கம் செய்வதற்கும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசித் தேதி ஆகஸ்ட் 24 ஆகும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு செப்டம்பர் 6-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com