லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி ஆணையர் கையும்,களவுமாக பிடிபட்டார்

லஞ்சம் வாங்கும்போது கையும்,களவுமாக வேலூர் மாநகராட்சி ஆணையர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி ஆணையர் கையும்,களவுமாக பிடிபட்டார்

வேலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கொசு ஒழிப்பு தொடர்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வேலூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக செயல்பட்டார். 

இதன் ஒப்பந்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.10,90,200 பாலாஜிக்கு வேலூர் மாநகராட்சியால் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத் தொகையை வழங்குவதில் வேலூர் மாநகராட்சி ஆணையர் டி.குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

மேலும், ஒப்பந்தப் பணம் வழங்குவது தொடர்பாக ரூ.22,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் கடைசியாக ரூ.20,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இச்சம்பவம் குறித்து பாலாஜி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பாலாஜியிடம் அளித்து வேலூர் மாநகராட்சி ஆணையரிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து, ரசாயனம் தடவிய அந்தப் பணத்தை பாலாஜி வழங்கிய போது சரியாக புதன்கிழமை காலை 11.30 மணியளவில் வேலூர் மாநகராட்சி ஆணையர் டி.குமார் கையும்,களவுமாக பிடிபட்டார்.

பின்னர் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com