'108' சேவைக்கு புதிதாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிதாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிதாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 890 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸுகளும் செயல்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், அதிக தூரம் ஓடிய வாகனங்களையும், சேதமடைந்த வாகனங்களையும் மாற்றும் பொருட்டு, புதிதாக 78 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அந்த வாகனங்களுக்கு தரக் கட்டுப்பாடு, உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட வடிமைப்புப் பணிகள் தாம்பரம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பணிமனையில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக வாங்கப்பட்டுள்ள 78 வாகனங்களில், 48 வாகனங்களின் வடிவமைப்பு உள்ளிட்டப் பணிகள் நிறைவடைந்து சேவைக்கு தயராக உள்ளன. அவை இன்னும் ஓரிரு நாள்களில் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்படும். மீதமுள்ள 30 வாகனங்களுக்கான வடிமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com