நீட் தேர்வு குறித்து 2 நாளில் முடிவு தெரியும்:அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தில் இரண்டு நாளில் முடிவு தெரியும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தில் இரண்டு நாளில் முடிவு தெரியும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சேலத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு, கொசுப் புழுக்களை அழித்தல், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி சிகிச்சை அளித்தல் என பல்வேறு கோணங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கென சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து வருகிறோம்.
அதேவேளையில், மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால், அப் பகுதியில் மருத்துவ விரைவுக் குழுவினர் ஆய்வு நடத்த தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் மஸ்தூர் பணியாளர்களும், 776 மருத்துவர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்களை களப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். 100 சதவீதம் டெங்குவை கட்டுப்படுத்தி விடுவோம்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை. மருத்துவ சிகிச்சை அளிப்பதில் வெளிப்படையாக உள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை புறநோயாளிகளாகப் பார்க்காமல், உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. நிலவேம்புக் குடிநீரும் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் விதிவிலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இருந்த போதிலும், சட்ட சிக்கல் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மட்டும் நீதிமன்றம் விலக்கு அளித்தது. அதனால் மீண்டும் விதிவிலக்கு கேட்பதற்கான வழிமுறை குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது.
மருத்துவக் கல்விக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பதால், மத்திய அரசுக்கு உச்சபட்ச அழுத்தம் கொடுத்துள்ளோம். மத்திய அரசு கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து வருகிறது. எனவே, மாணவர்கள் குழப்பமடையாமல் இன்னும் இரண்டு நாள்கள் பொருத்திருக்க வேண்டும்.
மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கினால் கூட 6 நாள்களில் சேர்க்கையை முடித்து விடுவோம்.
அதுமட்டுமல்லாமல், நிகழாண்டில் 1000 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களை கூடுதலாக்கி உள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறியது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். இதர சில காய்ச்சலால் 15 பேர் இறந்துள்ளனர். கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்த நுண்ணுயிரி முறையையும் பயன்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் தங்களது குடியிருப்புப் பகுதிகளை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com