நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகள் விலக்குக் கோரப்பட்டுள்ளது

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகள் விலக்குக் கோரப்பட்டுள்ளது

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ எட்வர்ட் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களைஅடிப்படையாகக் கொண்டு தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சுமார் 10,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச இட வசதி இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com