மசூர் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மசூர் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

சென்னை: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 'மசூர்' வகை பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரி, அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 'மசூர்' வகை பருப்பு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது; எனவே மசூர் பருப்பு கொள்முதலுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, கடலூரைச் சேர்ந்த ஆதி ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றதில்  பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பினை வழங்கியது. தீர்ப்பு விபரம் வருமாறு:

மசூர் வகை பருப்பினை கொள்முதல் செய்வதற்கு முன், அதனுடன் கோசி வகை பருப்பு  மற்றும் நிறமூட்டிகள் எதுவும் கலக்கப்படுகின்றனவா என்பதை முறையான ஆய்வக சோதனைகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதன்பிறகே மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கோரி, வழக்கினை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com