அதிமுக அணிகள் இணைய வேண்டும்

கருத்து வேறுபாடுகளைக் களைந்து அதிமுகவின் அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைய வேண்டும்

கருத்து வேறுபாடுகளைக் களைந்து அதிமுகவின் அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவின் உட்கட்சி பிரச்னை பெரிதாக நீடித்து வருகிறது. ஆளும் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆட்சி நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைபெற வேண்டிய அன்றாட, அத்தியாவசியப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. குறிப்பாக, தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், டெங்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழலில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, உட்கட்சியின் கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆளும் ஆட்சியினர் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். ஆட்சி, அதிகாரம், நிர்வாகம், கட்சி என சுமுகமான சூழல் ஏற்பட்டால்தான் மக்கள் பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்த முடியும்.
குறிப்பாக, நீட் தேர்வில் விலக்கு பெறவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்வு காண வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com