ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு இல்லை: ஓஎன்ஜிசி அதிகாரி விளக்கம்

ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு இல்லை என்று அதன் அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு இல்லை: ஓஎன்ஜிசி அதிகாரி விளக்கம்

ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு இல்லை என்று அதன் அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்தையும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தையும் எதிர்த்து அக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி செயல்பாடு குறித்து அதிகாரி ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்ளிடம் கூறுகையில், ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. ஓஎன்ஜிசி உலகத்தரத்தை கடைபிடிக்கிறது. எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டால்தான் நாடு வளர்ச்சி அடையும். ஓஎன்ஜிசி மீது தொடர்ந்து தவறான கருத்துக்கள் பரப்படுகிறது. எண்ணெய் குழாய் உடைப்பை சரிசெய்ய முயன்றபோது அதனை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். 

போராட்டக்காரர்கள் ஓஎன்ஜிசி மீது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காவும் செயல்படுகிறது. முன்னதாக நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com