தங்கத்தில் செங்கோட்டை: சிதம்பரம் இளைஞர் வடிவமைத்தார்

சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் தங்கத்தால் செங்கோட்டை உருவத்தை வடிவமைத்துள்ளார்.
தங்கத்தால் செய்யப்பட்ட செங்கோட்டை. (உள்படம்) ஜே.முத்துக்குமரன்
தங்கத்தால் செய்யப்பட்ட செங்கோட்டை. (உள்படம்) ஜே.முத்துக்குமரன்

சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் தங்கத்தால் செங்கோட்டை உருவத்தை வடிவமைத்துள்ளார்.
சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜெயபால் பத்தர் மகன் ஜே.முத்துக்குமரன் (36). 9}ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது தந்தையுடன் இணைந்து நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மிகவும் குறைந்த அளவு தங்கத்தில் சிறிய பொருள்களையும் ஆர்வமுடன் வடிவமைத்து வருகிறார். 70}ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தற்போது 2 கிராம் 150 மில்லி தங்கத்தில் தில்லி செங்கோட்டையை வடிவமைத்துள்ளார். 1 செ.மீ. உயரம், 1.5 செ.மீ. அகலமும் கொண்ட இந்த செங்கோட்டையை 5 நாள்களில் வடிவமைத்துள்ளார்.
இவர் ஏற்கெனவே, நடராஜர் கோயில் பொற்சபை, தாஜ்மஹால் உள்ளிட்ட பலவகை உருவங்களை குறைந்த அளவு தங்கத்தால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com