தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் ஸ்டாலின் பேட்டி:
கேள்வி: அதிமுகவில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. தமிழக பொறுப்பு ஆளுநர் விரைவில் சென்னை வரக்கூடிய சூழல் உருவாகும் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?
பதில்: அசாதாரண சூழல் உருவாகியிருப்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. ஆனால் எப்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என்று அதிமுக பிரிந்ததோ அப்போதிலிருந்தே தமிழகத்தில் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவு வர வேண்டும். நிச்சயமாக நல்ல தீர்வு ஏற்பட வேண்டும்.
கேள்வி: திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா?
பதில்: தேவைப்பட்டால் கொண்டுவரப்படும்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது: கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கை தி ஹிந்து குழுமத் தலைவர் ராம் திறந்து வைத்தபோது, காட்சி அரங்கை நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். முரசொலி அலுவலகத்தில் 2 மாதங்கள் மட்டும் தாற்காலிக காட்சி அரங்கம் இருக்கும். அதற்குப் பிறகு, நிரந்தரக் கருவூலம் வைக்கப்படும்.
கமல்ஹாசன், ரஜினி: முரசொலி விழாவில் பங்கேற்குமாறு நடிகர் கமல்ஹாசனைக் கேட்டபோது, அடுத்த நிமிஷமே ஒப்புக் கொண்டார். ரஜினிகாந்திடம் கேட்டபோது, நான் கட்டாயம் வருவேன், மேடைக்கு மட்டும் கூப்பிட வேண்டாம், ஏனென்றால் அனுபவம் இல்லை. நிகழ்வில் பேசக்கூடிய ஜாம்பவான்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்.
அதேபோல வந்து உட்காந்த பிறகு நானே கீழே இறங்கி சால்வை கொடுக்கலாம் என நினைத்தேன். அவர், வர வேண்டாம் நானே மேலே வருகிறேன் என்றார். அதுதான் முரசொலி விழா கொடுத்த உந்து சக்தியாகும் என்றார்.
செயலாளர்களுக்குப் பாராட்டு: முரசொலி பவள விழா சிறப்பாகச் செயல்படக் காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் சுவர்க் கடிகாரத்தை மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார். கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், மாவட்டச் செயலாளர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
க.அன்பழகனுடன் சந்திப்பு: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்றார். அன்பழகனைச் சந்தித்து பவள விழா மலரைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com