பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மரக்களவாய் மீன்

பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மீனவர் வலையில் சனிக்கிழமை அரிய வகை மரக்களவாய் மீன் சிக்கியது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மரக்களவாய் மீன்

பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மீனவர் வலையில் சனிக்கிழமை அரிய வகை மரக்களவாய் மீன் சிக்கியது.

பாம்பன் தெற்கு பகுதியில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 100}க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500}க்கும் மேற்பட்ட பாம்பன் மீனவர்கள் சனிக்கிழமை மீன் பிடித்தனர். இதில் மீனவர் அருள் வலையில் அரிய வகை மரக்களவாய் மீன் சிக்கியது. அந்த மீனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உள்பட பலரும் வேடிக்கை பார்த்தனர்.
இது குறித்து மீனவர் அருள் கூறுகையில், களவாய் மீன்கள் பொதுவாக 3 வகைப்படும். தாழங்களவாய், புள்ளிக்களவாய், மரக்களவாய் எனப்படும். இவ்வகையான மீன்கள் ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் ஒரு சேர அமைந்துள்ள இருபால் உயிரினமாகும்.
பொதுவாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகபட்சமாக 25 கிலோ எடையுள்ள களவாய் மீன்களே கிடைத்திருக்கின்றன. ஆனால் தற்போது பிடிபட்டுள்ள இம்மீன் 160 கிலோ எடையும், 3 அடி சுற்றளவும் உடையதாக உள்ளது. இம்மீன் மரக்கட்டை போன்ற தோற்றமளிப்பதால் மரக்களவாய் மீன் என அழைக்கப்படுகிறது. கடலின் அடிப்பகுதியில் வாழும் இம்மீன்கள் கடலில் பாறைகளின் மேற்புறங்களில் உள்ள பாசிகளை உணவாகத் தின்று உயிர்வாழக்கூடியவை என்று தெரிவித்தார்.
இந்த மீனை கருவாட்டு வியாபாரி ஒருவர் கிலோ ரூ.50 வீதம் ரூ.8 ஆயிரத்துக்கு பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com