முதல்வரிடம் ஆலோசித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

முதல்வரிடம் ஆலோசித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
முதல்வரிடம் ஆலோசித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

முதல்வரிடம் ஆலோசித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா ஆகியோர் டெங்கு காய்ச்சல் சிகிச்சை வசதிகள் குறித்து வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தனர்.
மருத்துவமனையில் டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகளை பொது சுகாதாரத் துறை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனால் டெங்கு தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தேனி, கோவை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களில் முழுவதும் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீவிரமான டெங்கு பாதிப்பு இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்ற நிலையை உருவாக்க போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ். கொசுக்களை ஒழிக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.13.95 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு, பல்வேறு நிலைகளில் சட்டப் போராட்டமும், மத்திய அரசுக்கு அழுத்தமும் தந்தது.
நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக முதல்வர் பிரதமரிடம் தெரிவித்த கோரிக்கைகள், உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பு குறித்தும், சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முன்னிலையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதன் பிறகு ஓரிரு நாள்களில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தும் தேதி அறிவிக்கப்படும்.
ஆய்வின் போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com